சேதுபாவாசத்திரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி
அரசமைப்பை பாதுகாப்பேன் என பாஜக சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும்: ராகுல்
புது தில்லி: நீங்கள் உங்கள் தலைவரின் வார்த்தையை ஆதரிக்கிறீர்களா? ஆனால், நாடாளுமன்றத்தில் அரசமைப்பை பாதுகாப்பேன் என்று சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும் என்று மக்களவையில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசமைப்புச் சட்டம் குறித்து பேசுகையில், அரசமைப்பை பாதுகாப்பேன் என்று சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கிண்டல் செய்கிறீர்கள், அவரை அவமதிக்கிறீர்கள், அவதூறு பரப்புகிறீர்கள் என்று காட்டமாகப் பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பண்டைய இந்தியா இல்லாமல் நவீன இந்தியாவின் அரசமைப்பை எழுத முடியாது. காந்தி, நேரு, அம்பேத்கரின் எண்ணங்கள் என்னவென்று அரசமைப்பு மூலம் உணர முடிகிறது. அரசு வேலைகளில் நடக்கும் முறைகேடு மூலம் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
அரசமைப்பு மற்றும் இந்தியர்கள் பற்றி மாற்று கருத்து கொண்டிருப்பதை சாவர்க்கரே எழுதியிருந்தார். வேதத்திற்கு அடுத்ததாக வணங்க வேண்டியது மனுஸ்மிருதி என்று சாவர்க்கர் கூறியிருந்தார். உங்கள் தலைவரின் வார்த்தையை நீங்கள் (பாஜக) ஆதரிக்கிறீர்களா? என்று ஆளுங்கட்சி எம்.பி.க்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
தற்போது அரசமைப்பைப் பாதுப்போம் என்று நீங்கள் சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும்.
நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களை புகழ தயங்குகிறது பாஜக. பெரியார், அம்பேத்கர், காந்தி என அனைத்து தலைவர்களையும் நாங்கள் வணங்குகிறோம். எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அம்மாநில தலைவர்களை வணங்கிப் போற்றுகிறோம் என்றும் கூறியிருந்தார்.
அரசமைப்பைப் பற்றி சாவர்க்கர் கூறுகையில், இந்திய அரசமைப்பு என்பது, இந்தியர்களைப் பற்றிய எதையும் கொண்டிருக்காத ஒன்று என்றும் மனுஸ்மிருதி என்பது வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய ஒன்றாகும், மேலும் இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த புத்தகம் பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மிக மற்றும் தெய்விகப் பயணத்தை குறியீடாகக் கொண்டிருக்கிறது என்றும் ராகுல் பேசியுள்ளார்.