செய்திகள் :

"அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயார்" - தங்கம் தென்னரசு

post image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, டிசம்பர் 4ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்கும் ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் தி.மு.க மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் தேர்தலை முன்னிட்டு மாற்றமடைந்து வருகிறது. எந்தக் கூட்டணி யாருடன் சேருகிறது என்பது குறித்து பல ஊகங்கள் பேசப்பட்டாலும், தி.மு.கவிற்குக் கவலையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

“எந்தக் கூட்டணி யாருடன் சென்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. நரி வலம் வந்தாலும், இடம் சென்றாலும் நமக்குத் தொடர்பில்லை. முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைக்கும் கூட்டணியே எப்போதும் வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்துள்ளது; இனியும் அதுவே வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று அவர் உறுதியாக கூறினார்.

“புயல் வந்தாலும் இறுதியில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களில் கரையைக் கடக்கும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் எந்தப் புயலும் பெரிய சவாலாக மாறாது. அரசியல் புயல்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, எதிர்காலத்தில் உருவாகும் அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலைகளைக் கவனத்துடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி வலுவாகத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஒருங்கிணைந்த உழைப்பின் மூலம் வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க வலுவான வெற்றியைப் பெற அனைவரும் செயல்பட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

DMK : 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?

ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி' என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால்,... மேலும் பார்க்க

Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல... மேலும் பார்க்க

UP: SIR பணிகளால் அழுத்தம்; உயிரை மாய்த்துக்கொண்ட BLO - நடந்தது என்ன?

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 46 வயது BLO வேலைப்பழு காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு த... மேலும் பார்க்க

"விஜய் எதிரியைச் சொல்லிவிட்டார்; கமலின் எதிரி யார்?" - கமல் சொன்ன பதில்!

கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார்.அதில் பல்வேறு கேள்விகள் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, 'ஒரு சீனியராக விஜய்க்கு நீங்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின்னணி என்ன?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (01.12,2025) நாய் ஒன்றை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதற்காக பாஜகவினரால் கண்டிக்கப்ப... மேலும் பார்க்க