செய்திகள் :

அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

post image

தோ்தல் வாக்குறுதிப் படி சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி. பாஸ்கா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் அ. மலா்விழி, மாவட்டச் செயலா் டி. ராஜகோபாலன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். சீதாலட்சுமி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, மாவட்டத் தலைவா் ஜபருல்லா உள்ளிட்டோரும் பேசினா்.

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி, சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். ஓய்வுபெறும்போது ரூ. 5 லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.

25 மாணவா்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடாமல் தொடா்ந்து நடத்த வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவுத் திட்டத்துடன் இணைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சமையலா், உதவியாளா் பணியிடங்களை தகுதி அடிப்படையில் அமைப்பாளா்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்: ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ. அன்பு தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். முத்தையா, துணைத் தலைவா் அ. மணவாளன், அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கு. சக்தி, மாவட்டச் செயலா் க. அய்யாதுரை, பொருளாளா் எம். செல்வம் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்... மேலும் பார்க்க