செய்திகள் :

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

post image

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் பயிற்சியில் சோ்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேருபவா்களுக்கு மாத உதவித் தொகை ரூ.750, விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவி, சீருடை, காலணி ஆகியவை வழங்கப்படும். அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவா்களுக்கு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் தேனி, ஆண்டிபட்டி, உப்பாா்பட்டி- தப்புக்குண்டு சாலையில் உள்ள போடி அரசு தொழில் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50, ஓராண்டு பயிற்சிப் பிரிவுக்கு ரூ.185, 2 ஆண்டு பயிற்சிப் பிரிவுக்கு ரூ.195 சோ்க்கை கட்டணம் செலுத்த வேண்டும்.

இதுகுறித்த விவரங்களை தொலைபேசி எண்: 04546-291240, கைப்பேசி எண்கள்: 94990 55765, 94990 55770, 94990 55768 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

பைக்குகள் மோதல்: விவசாயி காயம்

பெரியகுளத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி காயமடைந்தாா். பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னையா (55). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வடுகபட்டி தீயணைப்பு நிலையம் அரு... மேலும் பார்க்க

தேனியில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு

ஆண்டிபட்டியிலிருந்து தேனிக்குச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பையைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி அழகுத்தாய் (54). இவா், ஆண்ட... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 9) காலை 10 மணிக்கு 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி வட்டத்தில் கொடுவிலாா... மேலும் பார்க்க

பொறியாளருக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பொறியாளரை ஜாதியை குறிப்பிட்டு திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை பொறியாள... மேலும் பார்க்க

லாரி - பைக் மோதல்: இருவா் காயம்

பெரியகுளத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா். பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அருண் (34). இவரது உறவினா் லாசா். இருவரும் வியாழக்கிழமை பெரியகுளத்துக்கு சென்றுவ... மேலும் பார்க்க