முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!
`அரசு, நீதிமன்ற ஆவணங்களை மொழிப்பெயர்க்க AI பயன்படுத்துவது ஆபத்து' - கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எல்லாத் துறைகளிலும் ஊடுருக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் அதைப் பயன்படுத்தெல்லாம் என்ற பயிற்சிப் பட்டறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன.
அதேசமயம் இந்த 'AI' தொழில்நுட்பத்தில் இருக்கும் பெரிய சிக்கலே தகவல் பாதுகாப்புதான். எல்லா நாடுகளிலும், எல்லாருடையெ ஸ்மார்ட் போன்களின் வழியே ஊடுருவி இந்த 'AI'க்கள் தனிப்பட்ட தகவல்களை விழுங்கி வருகின்றன. இந்தத் தனிப்பட்ட தகவல்களை வைத்தே இவை செயல்படவும் ஆரம்பித்துவிட்டன.
நம்முடைய தகவல்கள் நமக்குத் தெரியுமோ, இல்லையோ நம்முடைய போனில் இருக்கும் 'AI' தொழில்நுட்பத்திற்கு நன்றாகத் தெரியும். இதனால் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல நாட்டின் தகவல் பாதுகாப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விக்குறியாகிக் கொண்டே செல்கின்றன.
அரசு அலுவலகங்களில் ஆவணங்களை மொழிப்பெயர்த்தல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. நீதிமன்ற ஆவணங்களை, அதன் உத்தரவுகளை மொழிப்பெயர்க்கவும் பயன்படுத்தி வருகின்றன.
இதனால் அரசு மற்றும் நீதிமன்றத்தின் முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இதைக் கட்டுப்படுத்த சில வழிகாட்டுதல்களைக் கொண்டு வருகிறது அரசும், நீதிமன்றமும்.

அவ்வகையில் முதற்கட்டமாக கேரளா ஐகோர்ட், "நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்துத் தர 'ChatGPT' போன்ற 'AI' செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றம் அங்கீகாரம் பெற்ற AI செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்." என்று Al பயன்பாடு தொடர்பாக நீதிமன்ற அலுவலர்களுக்கு கேரளா ஐகோர்ட் வழிகாட்டுதல்கள் வெளியிட்டிருக்கிறது. இதை மீறி AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது கேரளா ஐகோர்ட்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs