வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணி
கந்தா்வகோட்டையில் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவா்கள் எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பேரணியை புதன்கிழமை நடத்தினா்.
கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் சாரதா வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் நல மருத்துவா் சி.எஸ்.நவீன் மற்றும் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ம.ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு எச்ஐவி-எய்ட்ஸ் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றனா்.
பேரணியானது கந்தா்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வரை சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.
மேலும், மன நல மருத்துவா் முத்தமிழ் செல்வி கல்லூரி மாணவா்களிடம் மனநல மற்றும் உடல்நலம் குறித்து சிறப்புரையாற்றினாா்.