துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு மையம் திறப்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை திறந்துவைத்தாா். அதேவேளையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் கலந்து கொண்டு மருத்துவ சேவை மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.
விழாவில், நலப்பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மாலதி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.