உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்
தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கியது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் புதன்கிழமை தொடங்கி அக்.2 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (2 வாரங்கள்) முகாம் நடைபெற உள்ளது.
முகாம்களில் பெண்களுக்கான ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை,விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குதல், பொது மருத்துவம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. எனவே, பெண்கள் இந்த வாய்ப்பின் மூலம் பயன்பெறலாம் என கூறிப்பிடப்பட்டுள்ளது .