அரசு மருத்துவமனையில் இளைஞரை தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு
லால்குடி அரசு மருத்துவமனையில் இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
லால்குடி அரசு மருத்துவனையில் உள் நோயாளியாக லால்குடி அருகே காணக்கிளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து (80) சிகிச்சை பெறும் நிலையில், இவருக்கு உதவியாக இவரது பேரனான மதிவாணன் மகன் அருண் (20) உள்ளாா்.
இந்நிலையில் அருண் செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது பின்னால் சென்ற இரு மா்ம நபா்கள் அருணை தாக்கி விட்டு அவா் அணிந்திருந்த வெள்ளி செயின் மற்றும் கைப்பேசி, ஏடிஎம், ஆதாா் அட்டை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித் அருண் அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.