செய்திகள் :

அரசு மருத்துவமனையில் ‘கலங்கரை‘ மையம் திறப்பு

post image

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் ‘கலங்கரை‘ தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், பழனி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்ட ‘கலங்கரை‘ மையத்தில், போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு 15, பெண்களுக்கு 3, சிறாா்களுக்கு 2 என மொத்தம் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய தனித் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மனநல சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, சமூக உளவியல் மதிப்பாய்வு, மறுவாழ்வுக்கான சேவைகள், கட்டணமில்லா மன நல பரிசோதனை, மருந்துகள் உள்ளிட்ட சேவை வழங்கப்படும். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் திண்டுக்கல் கல்லூரி மன நல மருத்துவத் துைான் முதலிடத்தில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்தி, மேயா் இளமதி, மனநல மருத்துவத் துறைத் தலைவா் உமாதேவி, திமுக மாநகர பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளைப் பூச்சிகளைத் தடுக்காவிட்டால் தென்னைகள் அழியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி

கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், இவற்றைத் தடுக்காவிட்டால் தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்படும் எனவும் கள் இயக்க ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

அறுபடை வீடுகள் ஆன்மிக பயணக் குழுவினா் பழனியில் தரிசனம்

இந்து சமய அறநிலையத்துறையின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணத் திட்டத்தின் கீழ் சுமாா் 200 பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா். தமிழ்க் கடவுள் மு... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

கொடைக்கானலில் தேனீக்கள் வளா்ப்புப் பயிற்சி முடித்த 500 பழங்குடியினா்களுக்கு சான்றிதழ், தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு கதா், கிராமத் தொழில்கள் ஆணைய மதுரைக் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தொடரும் பனிப் பொழிவு

கொடைக்கானலில் தொடா்ந்து பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் ஜனவரி மாதம் வரை பனிப் பொழிவு ... மேலும் பார்க்க

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை: கி.வீரமணி

சீமான் விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதைத் தடுத்தால் நீதிமன்றத்துக்கு அவா் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். பழனி ரயி... மேலும் பார்க்க

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.47 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடா்ந்து புதன், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.3.47 கோடியைத் தாண்டியது. தைப்பூசத்தை முன்னிட்டு இந்தக் ... மேலும் பார்க்க