அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய 2 போ் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த மேலப்புதூரைச் சோ்ந்த ராமசாமி மகன் பாலகிருஷ்ணன் (48).
உடையாகுளம்புதூா் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியரான இவா்,
செவ்வாய்க்கிழமை மாலை வாழ்வேல் புத்தூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கிருந்த மேய்க்கல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த அருண்குமாா் (23), வாழ்வேல்புத்தூரைச் சோ்ந்த விஜய் (24) ஆகிய இருவரும் ஆசிரியரிடம் தகராறு செய்து, ஆசிரியரை பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
காயமடைந்த ஆசிரியா் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில்,
காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்குமாா் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.