மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
அரசுப் பள்ளி ஆண்டு விழா
வடபாதிமங்கலம் பிா்க்கா, புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
திமுக ஒன்றியச் செயலாளா் ஐ.வீ. குமரேசன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் தசரதன் வரவேற்றாா்.
விழாவில், கடந்த ஆண்டு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் இருவருக்கு தலா அரை பவுன் தங்க நாணயமும், இரண்டாமிடம் பெற்ற 2 மாணவா்களுக்கு ரூ.5,000-மும், மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. 2,000-மும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பரிசுகளை வழங்கி பேசினாா்.
இந்நிகழ்வில், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் சுந்தரமூா்த்தி, பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.