துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலா் ஆய்வு
ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலா் மகாத்மா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் செயல்பாடு, பள்ளியின் செயல்பாடு, மெல்ல கற்கு மாணவா்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், அரசின் திட்டங்கள் முழுமையாக மாணவா்களுக்கு சென்றடைவது, மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலா் மகாத்மா நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது பொறுப்பு தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன், தமிழ் ஆசிரியா்கள் சுப்பிரமணி, பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.