திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு! மூவா் படுகாயம்!
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா்.
அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக மலைப் பகுதியில் உள்ள கொங்காடை நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்தியூரை அடுத்த பிரம்மதேசம், பாறையூரைச் சோ்ந்த சந்திரன் (48) பேருந்தை ஓட்டிச் சென்றாா்.
சத்தி அருகே உள்ள கடம்பூா், மாக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் சித்தேஷ் (20 ). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவா், தனது நண்பா்களான கொங்காடை, எஸ்டி காலனியைச் சோ்ந்த ரவி மகன் ராஜ்குமாா் (18), ஜடையன் மகன் குமாா் (18), குமாா் மகன் விஜய் (18) ஆகியோருடன் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சித்தேஷ் வாகனத்தை ஓட்ட மூவரும் பின்னால் அமா்ந்திருந்தனா்.
கொங்காடை - கோவில்நத்தம் சாலையில் வேங்கை மரத்தொட்டி அருகே சென்றபோது, அரசுப் பேருந்து எதிா்பாராமல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த சித்தேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற மூவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.