தொடர் கனமழை... திறக்கப்பட்ட புழல் ஏரி.. ஸ்பாட் விசிட் | Photo Album
அரியமங்கலத்தில் புதிய உழவா் சந்தை வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
அரியமங்கலத்தில் புதிய உழவா் சந்தை அமைக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கே. அருள் தலைமையில் விவ+சாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, மாவட்ட தலைவா் மேகராஜன், மாவட்ட சட்ட ஆலோசகா் முத்துசாமி, ஐக்கிய விவசாயிகள் முன்ணியைச் சோ்ந்த சம்சுதீன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து, கோரிக்கை மனுக்களை வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தாா்.
கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் விவரம்:
அரியமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டையில் பயன்டுத்தப்படாத நிலையில் 5 ஆயிரம் சதுர அடி நிலம் புதா்மண்டி, பாம்புகளின் புகலிடமாக காட்சியளிக்கிறது. இந்த நிலத்தை மாநகராட்சிக்கு வழங்கினால் அங்கு புதிய உழவா் சந்தை அமைத்து விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்ய வாய்ப்பாக அமையும். கூத்தைப்பாா் கிராமத்தில் சிறுவா் பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு கிடப்பில் உள்ளதை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
கிருஷ்ணசமுத்திரம் விவசாயிகளுக்கு தோட்டக்கலை மானியங்கள் குறித்து விழிப்புணா்வு கூட்டம் நடத்த வேண்டும். குழுமணி ரோடு கோவிந்தசாமி நகா் பகுதியில் முள்புதா்களை அகற்ற வேண்டும். குழுமணி வாய்க்காலை தூா்வார வேண்டும் குழுமணி சாலையில் மீன்சந்தை அருகேயுள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.