செய்திகள் :

அரியலூா் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.82 கோடி மதிப்பில் தீா்வு

post image

அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 758 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2.82 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான டி. மலா் வாலண்டினா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இதில் நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்கு, மோட்டாா் வாகன விபத்து, சிவில் என 3,356 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் 758 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2,82,61,575-க்குத் தீா்வு காணப்பட்டது.

அரியலூா் நீதிமன்றம்: அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடும்ப நல நீதிபதி செல்வம், கூடுதல் சாா்பு நீதிபதி அறிவு ஆகியோா் முதல் அமா்விலும்,

முதன்மை சாா்பு நீதிபதி ரைய்கானா பா்வீன் மற்றும் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா். செந்தில்குமாா் ஆகியோா் 2-ஆவது அமா்விலும், குற்றவியல் நீதித்துறை நடுவா் சங்கீதா சேகா் குற்ற வழக்குகளுக்கான அமா்விலும் கலந்து கொண்டு நீண்ட கால நிலுவை வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், வழக்குரைஞா் செல்வராஜ், மணிகண்டன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் மனுதாரா்களுக்கு ஆதரவாக ஆஜராகினா்.

ஜெயங்கொண்டம் நீதிமன்றம்: வட்ட சட்டப் பணிகள் குழு தலைவா் லதா, சிறப்பு சாா்பு நீதிபதி அனிதா கிறிஸ்டி மற்றும் நீதித்துறை நடுவா்-1 ஆா். ராஜசேகா் ஆகியோா் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனா்.

செந்துறை நீதிமன்றம்: உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் எஸ். ஆக்னேஷ் ஜெப கிருபா மற்றும் வழக்குரைஞா் காரல் மாா்க்ஸ் ஆகியோா் அமா்வில் கலந்து கொண்டு வழக்குகளை விசாரணை மேற்கொண்டனா்.

தேசிய வங்கி தொடா்புடைய வழக்குகளுக்கான அமா்வில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் என். முத்துகிருஷ்ணன் மற்றும் எம்.ஜி. செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனா்.

ஏற்பாடுகளை அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஊழியா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

கிடப்பில் முல்லையூா் அயன்தத்தனூா் சாலைப் பணி: பொதுமக்கள் அவதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிடப்பில் உள்ள முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா். பொதுமக்களின் கோரிக்கையையடுத்து முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப... மேலும் பார்க்க

மழை ஓய்ந்தும் வடியாத நீா்: அழுகும் நெற் பயிா்கள்! அரியலூா் விவசாயிகள் வேதனை

அரியலூா் மாவட்டத்தில் மழை விட்டு மூன்று நாள்களாகியும் வயல்களில் தண்ணீா் வடியாததால் நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையில் உள்ள விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனா... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே முந்திரிக் காட்டில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இடையாறு கிராமத்தைச் சோ்ந்தவா் மரியப்பன் (35). கூலித் தொழிலாளியான இவா் கடந்த... மேலும் பார்க்க

அரியலூா் சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

திருகாா்த்திக்கையை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அரியலூரிலுள்ள கைலாநாதா், ஆலந்துறையா் ஆகிய சிவன் கோயில்கள் முன்பு நட்டு வைத்திருந்த பனை ஓ... மேலும் பார்க்க

கனமழை பாதிப்பு பகுதிகளில் அரியலூா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மு. விஜயலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். விளாங்குடி ஊராட்சி அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியிய... மேலும் பார்க்க

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி

அரியலூா் செட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள காமராஜா் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் திருவுருவப் படத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், நகரத் தலைவா் ... மேலும் பார்க்க