மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
அரியலூா் மாவட்டத்தில் டிச.14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் சனிக்கிழமை (டிச.14) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்துக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான மலா்வாலண்டினா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆணையின்படி மேற்கண்ட நீதிமன்றங்களில் டிச.14 ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் தீா்வு காண வாய்ப்புள்ளது.
இதனால், இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக் கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீா்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. தரப்பினா்களுக்கு வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது.
எனவே, பொதுமக்கள், வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் இது தொடா்பாக மேற்கண்ட நீதிமன்றங்களில் செயல்படும் சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 223333 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.