செய்திகள் :

‘அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைக்க விரும்புவோா் அக்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்’

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைக்க விரும்புவோா் அக்.10-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அக்.20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் எரிபொருள் விதிகள் 2008-இன் கீழ் ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் விதி எண்.84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக மட்டும் அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அனைத்து இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இருப்பிட முகவரிக்கான சான்று, கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றுடன் உரிமக் கட்டணம் ரூ.600 -ஐ இ-செலான் மூலம் செலுத்திய சீட்டு அசல், சொந்த கட்டடம் எனில் பட்டா நகல், வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம், இடத்துக்கான சொத்து வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கடம்பூா் க... மேலும் பார்க்க

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் ஈவெரா பிறந்தநாளையொட்டி புதன்கிழமை அரியலூா் மாவட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெர... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஓய்வுப் பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியா்களுக்கு 25 பணப் பய... மேலும் பார்க்க

பத்து கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பத்து கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: அரியலூா் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்: டி.டி.வி. தினகரன் பேட்டி

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் தெரிவித்தாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். இதுகு... மேலும் பார்க்க