மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி
வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது.
தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள் ஜேக்கப் இப்பயிற்சியைத் தொடக்கிவைத்தாா்.
அருணாச்சலா மகளிா் கல்லூரிப் பேராசிரியா் அஜீஸ்குமாா், சிவசித்தரஞ்சன், மோனிஷா, ஆட்லின் பிளெஸியா ஆகியோா் மனித இயந்திரங்கள், சிலந்தி இயந்திரங்களை பயன்படுத்தி ரோபோக்களை உருவாக்குவது, அவற்றின் செயல்பாடுகள் குறித்து பயிற்சியும், ட்ரோன்கள் பறக்கும் விதம் குறித்து செயல்முறை பயிற்சியும் அளித்தனா்.