மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவ...
அரையிறுதியில் அசத்திய ரஹானே (98): இறுதிப்போட்டிக்கு தேர்வானது மும்பை!
சையத் முஷடக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை - பரோடா அணிகளும் மோதின. இதில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் சிவாலிக் சர்மா 36, ஷசாவத் ராவத் 33, குர்ணல் பாண்டியா 30 ரன்கள் அடித்தார்கள்.
பெரிதும் எதிர்பார்த்த ஹார்திக் பாண்டியா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆடிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 164/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மும்பை அணியில் ரஹானே 98 ரன்கள் அடித்து அசத்தினார். கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் 46 ரன்கள் எடுத்தார்.
ஆட்டநாயகான ரஹானே தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் மும்பை இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தேர்வாகியுள்ளது.
மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் தில்லி, மத்தியப் பிரதேச அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டி வரும் டிச. 15ஆம் தேதி சின்னசாமி ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
36 வயதிலும் சிறப்பாக விளையாடும் ரஹானேவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.