செய்திகள் :

அறந்தாங்கி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

post image

முறையாக ஊதியம் வழங்கக் கோரி, அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 100 பேரும், டெங்கு ஒழிப்புப் பணியாளா்கள் 30 பேரும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படவில்லையாம். டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு 3 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லையாம். இவைகளைக் கண்டித்து கடந்த நவம்பா் 22-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். அப்போது, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், நவ. 25-ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு அறந்தாங்கி ஒருங்கிணைப்பாளா் கா்ணா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெரிய கடைவீதி, வட்டாட்சியா் அலுவலகம், காந்தி பூங்கா சாலை வழியாக பேருந்து நிலையத்தில் ஊா்வலம் முடிவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதச் சம்பளம் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். நகராட்சி வேலை செய்யும் டெங்கு தடுப்புப் பணி ஊழியா்களின் 3 மாதச் சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்.

நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்த சொசைட்டி பணம் ரூ. 1 கோடியை உடனே செலுத்த வேண்டும். நீண்ட நாட்களாக ஆணையா் இல்லாமல் செயல்படும் நகராட்சிக்கு உடனே ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, எண்ணெய் காப்பு செய்து தண்ணீா், பசு... மேலும் பார்க்க

அசுத்தமான குளத்தால் நோய்ப்பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா்

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதியில் அரசுப் பள்ளி, குடியிருப்பு அருகேயுள்ள அசுத்தமான குளத்தால் நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள், குளத்தை விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் 36,524 விண்ணப்பங்கள் அளிப்பு: புதுகை ஆட்சியா் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது, மொத்தம் 36,524 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தெரி... மேலும் பார்க்க

புதுகையில் டிச. 6-இல் ஓய்வூதியா் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் டிச. 6-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்க விரும்பும் அனைத்துத் துறை ... மேலும் பார்க்க

சமூக நீதிக்கான தந்தைப் பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நீதிக்கான பணிகளை மேற்கொண்டவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் தந்தைப் பெரியாா் விருதுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை டிச. 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

டெங்கு, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என இந்தி... மேலும் பார்க்க