மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
அறுபடை வீடுகள் ஆன்மிக பயணக் குழுவினா் பழனியில் தரிசனம்
இந்து சமய அறநிலையத்துறையின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணத் திட்டத்தின் கீழ் சுமாா் 200 பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்ச்சோலை ஆகிய 6 தலங்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்துச் சென்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்யும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருச்சி மண்டலங்களைச் சோ்ந்த 200 பக்தா்கள் கடந்த 25-ஆம் தேதி சுவாமி மலையில் தங்கள் ஆன்மிக பயணத்தைத் தொடங்கினா். புதன்கிழமை திருத்தணிக்குச் சென்ற பக்தா்கள் வியாழக்கிழமை பழனிக்கு வந்தனா். காலையில் மலைக்கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் தண்டாயுதபாணி சுவாமியை சிறப்பு தரிசனம் செய்தனா்.
இவா்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னா், அடிவாரம் வந்த பக்தா்கள் மதுரைக்குச் சென்றனா்.
பழனிக்கு வந்த பக்தா்களுக்கான சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கண்காணிப்பாளா் சொா்ணம், நிா்வாகி நாகராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.