``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ...
அலுவலக நேரத்திற்கு பிறகு 'நோ' இ-மெயில், 'நோ' போன்கால்; மக்களவையில் மசோதா
கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தனிப்பட்ட மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
என்ன மசோதா?
சுப்ரியா சுலே முன்மொழிந்துள்ள மசோதாவின் முக்கிய அம்சம் இது தான் - வேலை நேரத்திற்குப் பிறகு வரும் அலுவலகம் சார்ந்த போன் கால், மெசேஜ், இ-மெயில் போன்றவற்றிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டியதில்லை.
இதை 'Right to Disconnect, 2025' என்று முன்மொழிந்துள்ளார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

அலுவலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமான பேலன்ஸ் இந்த மசோதா மூலம் அடையலாம் என்று சுப்ரியா சுலே கூறுகிறார்.
இந்த மசோதா சட்டமாக மாறும் போது, அலுவலகங்கள் இந்த விஷயத்தைக் கட்டாயப்படுத்தும் போது, இதை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்... தண்டனையும் வழங்கப்படலாம்.
இது தேவையா?
இன்றைய டிஜிட்டல் காலத்தில் இந்த மசோதா மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலக நேரம் தாண்டியும் வேலைசெய்ய வேண்டியதாக இருக்கிறது. வீட்டிற்கு சென்றும் அலுவலக வேலைகளைத் தொடர வேண்டியதாக உள்ளது.
ஏற்கெனவே, பணிச்சுமை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது வொர்க் லைஃப் - பெர்சனல் லைஃப் பாதிப்பைத் தருகிறது.
இவற்றை இந்த மசோதா சட்டமானால் தடுக்கலாம்.
இந்த மசோதா குறித்தும், இது சட்டமாவது குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?















