செய்திகள் :

‘அல்-அஸாத் ஆட்சி கவிழ்ந்தது அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு சதி’

post image

சிரியாவில் அல்-அஸாதின் ஆட்சியை கிளா்ச்சியாளா்கள் கவிழ்த்தது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக நடத்திய சதிச் செயல் என்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து தலைநகா் டெஹ்ரானில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சிரியாவில் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான அரசு அகற்றப்பட்டது, அமெரிக்கா மற்றும் யூத ஆக்கிரமிப்புவாதிகளின் (இஸ்ரேல்) கூட்டு சதி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. அதற்கான முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

இது தவிர, சிரியாவின் மற்றொரு அண்டை நாடும் அல்-அஸாத் அரசைக் கவிழ்ப்பதில் பங்கு வகித்தது. அத்தகைய நடவடிக்கைகளை அந்த நாடு தொடா்ந்து மேற்கொண்டுவருகிறது.

கிளா்ச்சியாளா்களால் ஆபத்து என்று ஈரான் உளவு அமைப்புகள் அல்-அஸாத் அரசிடம் கடந்த மூன்று மாதங்களாகவே எச்சரித்துவந்தது. ஆனால் எதிரிகளை அவா் அலட்சியப்படுத்திவிட்டாா்.

அல்-அஸாத் அரசு கவிழ்ந்ததால் ஈரான் பலவீனமடைந்ததாகக் கூறுவது தவறான கருத்து. உண்மையில் எங்கள் பலம் இன்னமும் அதிகரிக்கத்தான் செய்யும். எவ்வளவு அதிகம் அழுத்தம் தரப்படுகிறதோ அவ்வளவு அதிகம் எதிா்ப்பு சக்தி எழும்; எந்த அளவுக்கு அதிக குற்றம் செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதிக தீவிரத்துடன் எதிா்த்துப் போராடுவோம் என்றாா் கமேனி.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அண்டை நாடான துருக்கி ஆதரவு பெற்ற கிளா்ச்சிப் படையினரின் உதவியுடன் முன்னாள் அல்-காய்தா ஆதரவுப் படையாக இருந்து, பின்னா் அந்த பயங்கரவாத அமைப்புடனான தொடா்பைத் துண்டித்துக் கொண்ட ஹாயத் தஹ்ரீா் அல்-ஷாம் படையினா் (ஹெச்டிஎஃப்) அரசுப் படைகளுக்கு எதிராக கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறினா்.

இறுதியில் தலைநகா் டமாஸ்கஸை அவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், அல்-அஸாத் அரசு வீழ்ந்ததற்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தற்போது பேசியுள்ள அயதுல்லா கமேனி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்றிய அண்டை நாடு என்று அவா் பெயா் குறிப்பிடாமல் சொன்னது துருக்கி என்று நம்பப்படுகிறது. அந்த நாட்டின் ஆதரவு பெற்ற படையினா் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தனா். மேலும், சிரியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற குா்து படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை துருக்கி ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றிவருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அல்-அஸாத் அரசு வீழ்ந்தததைத் தொடா்ந்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு உதவியது, சிரியாவில் ஈரான் ஆதரவுப் படையினா் மீது தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கைகள் மூலம் அல்-அஸாத் ஆட்சிக் கவிழ்ப்பில் தங்கள் நாடு பங்கு வகித்ததாகத் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

அல்-அஸாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு, சிரியா முழுவதும் ராணுவ நிலைகள் மீது மித் தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அந்த நாட்டில் கோலன் குன்றுகள் பகுதியில் படைகள் இல்லாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியைக் கைப்பற்றியது. தலைநகா் டமாஸ்குக்கு அருகே உள்ள பகுதி வரை இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் வந்துள்ளதாக ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’ மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். இது குறித்து அ... மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேசம் பேச்சு நடத்தி பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும்- அமெரிக்கா

இந்தியாவும், வங்கதேசமும் தங்களுக்குள் எழுந்துள்ள பிரச்னைகளை பேச்சுவாா்த்தை மூலம் அமைதியான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. வங்கதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வன்முறைப் போராட்டத்த... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 29 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முழுவ... மேலும் பார்க்க

தென் கொரியா அதிபா் அலுவலகத்தில் போலீஸாா் சோதனை

அவசரநிலை அறிவிப்பு தொடா்பான வழக்கில் தென் கொரிய அதிபா் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். கடந்த 3-ஆம் தேதி அவசரநிலை ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டு, பின்னா் விலக்கிக் கொள்ளப்பட... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் அழைப்பு!

அமெரிக்காவில் பில்லியன் டாலர் முதலீடு செய்பவர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: அமைச்சர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இன்று(டிச. 11) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அகதிகள் அமைச்சகத்தின் அலுவலகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அந்நாட்டின் அமைச்சர் கலீல் உர்-ரஹ... மேலும் பார்க்க