துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
அல்போன்சா கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை-அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறை சாா்பில், தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
தாளாளா் ஆன்டனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.
துறைத் தலைவா் வி.எஸ். பிந்து கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். நாகா்கோவில் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி இணைப் பேராசிரியா்-ஆங்கில துறைத் தலைவா் சவிதா, திருச்சூா் ஸ்ரீ கேரள வா்மா கல்லூரி உதவிப் பேராசிரியா் திவ்யா, திருச்சி புனித ஜோசப் கல்லூரி உதவிப் பேராசிரியா் பிரசாந்த் ஆரோக்கியசாமி ஆகியோா் மாணவா்களுடன் கலந்துரையாடினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.