செய்திகள் :

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

post image

நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் கைது நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது, “கலைத்துறைக்கு காங்கிரஸ் அரசு உரிய மரியாதை அளிப்பதில்லை. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிக்கும் நடவடிக்கை மூலம், இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட அசம்பாவிதம், மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவே... இப்போது வேறொருவர் மீது பழி சுமத்துவதற்காக, பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.”

“இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும். திரைத்துறையினர் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, தெலங்கானா அரசு சம்பவத்தன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கையாளாமல் இருந்தவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் இதே பாணியிலான நடவடிக்கைகள் தொடருவது கவலையளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

அதேபோல, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் ‘பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்)’ கட்சியின் செயல்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கே.டி. ராம ராவ் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா காப்பீடு திட்டத்தில் 48 கோடி பேர் பதிவு! ஏன்?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தில் இதுவரையில் 48 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா (PMSBY) விபத்து காப்பீடு திட்டத... மேலும் பார்க்க

பேரிடர் காலங்களில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது: பிரியங்கா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். வயநாடு மக்களுக்கு நிவாரண நிதி உதவ... மேலும் பார்க்க

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் பதற்றம்: விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தம்!

தில்லிக்கு பேரணியாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைய... மேலும் பார்க்க

பொய் வழக்குப் போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

நாட்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனிநபர்களுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்து, போலியான ஆதாரங்களை தயாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

உ.பி.: சம்பலில் 45 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட கோயில்!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட கோயிலொன்று இன்று(டிச. 14) திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1978-ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த சிவாலயம், சுமார் 45 ஆண்டுகளுக்குப்பின் இப்போ... மேலும் பார்க்க

அரசமைப்பை பாதுகாப்பேன் என பாஜக சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும்: ராகுல்

புது தில்லி: நீங்கள் உங்கள் தலைவரின் வார்த்தையை ஆதரிக்கிறீர்களா? ஆனால், நாடாளுமன்றத்தில் அரசமைப்பை பாதுகாப்பேன் என்று சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும் என்று மக்களவையில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.மக்... மேலும் பார்க்க