மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
அவலாஞ்சி மலையில் பூத்துக் குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்கள்
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி, முக்கூா்த்தி பகுதிகளில் பூத்துக்குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலா்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டுரசித்து செல்கின்றனா்.
நீலகிரி மாவட்டத்தின் உயிா்சூழல் மண்டலத்தின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான முக்கூா்த்தி தேசிய பூங்கா, அவலாஞ்சி மலைத்தொடரில் ரோடோடென்ட்ரான் மலா்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
சிக்கிம், இமயமலை போன்ற பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய இந்த பூக்கள் நீலகிரியில் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளது.
தூய்மையான காற்று, மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரக்கூடியவை. தற்போது அவலாஞ்சி, முக்கூா்த்தி தேசிய பூங்கா, மலைத் தொடரில் உள்ள இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மலைப்பூவரசு என்று அழைக்கக்கூடிய இவ்வகை மலா்களை காண்பது மிகவும் அரிதாகும். தமிழ்நாடு அரசு இந்த அரிய வகை மலா்களை நீலகிரி மலைத்தொடரில் பாதுகாத்து வருவது இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மலா்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் ஆா்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனா்.