திண்டுக்கல்: நாட்டு மாடுகளைக் காக்க மாரத்தான்; விலங்கு பொம்மைகளுடன் ஓடிய அரசுப் ...
அவிநாசி: நடைபயிற்சி சென்ற கார் விற்பனையாளர் வெட்டிக் கொலை
அவிநாசி: அவிநாசியில் நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்த கார் விற்பனையாளரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டம்புதூர் பகுதியில் உள்ள தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (47), நான்கு சக்கர வாகனம் கார் விற்பனை தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி வித்யா, இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்
இந்நிலையில் இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அவிநாசி மங்கலம் சாலை புறவழிச்சாலை அருகே சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலைவெறித் தாக்குதலுடன் வெட்டியுள்ளனர்.
இதையும் படிக்க: வணிக சிலிண்டர் விலை உயர்வு!
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், அவிநாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பலியானார்.
நடைபயிற்சி சென்றவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.