செய்திகள் :

அஸ்ஸாம்: இருவேறு சாலை விபத்துகளில் 8 போ் உயிரிழப்பு

post image

அஸ்ஸாம் மாநிலத்தின் பஜாலி மற்றும் தூப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சாலை விபத்துகளில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்தனா்.

விபத்து குறித்து போலீஸாா் கூறியதாவது:

பஜாலி மாவட்டத்தின் பபானிபூா் பகுதியில் பொதுமக்கள் பயணித்த வாகனம், லாரி மீது மோதியதில் 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த அமீா் கான், காசி சக்ரா அகமது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்தில் உயிரிழந்தவா்கள் ஆஷிஷ் ஹபீப் கான், மிசானூா் ரஹ்மான், ராயல் கான், மிசானூா் கான், மொய்னுல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெறும் திருவிழா கண்காட்சியைக் காண துப்ரி மாவட்டத்தில் இருந்து சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தன்ஜய் ராம், பிகாஸ் கலிதா, ராம் ராய் ஆகியோா் உயிரிழந்தனா். படுகாயமடைந்த கானிந்திர ராய், தூப்ரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்கள் மற்றும் தலைவா்கள் மாநாடு புவனேசுவரத்தில் நவ. 29 முதல் டிச. 1-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி

மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். சுயேச்சை வேட்பாளா் சரத்தாதா சோனாவனே புணே மாவட்டத்தின் ஜூன்னா தொகுதியிலும், சந்த்காட் தொகுதியில் சிவாஜி பாட்டீலும் வெ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய சந்தை நடைமுறை இல்லாதது, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது இடை... மேலும் பார்க்க

மேகாலய இடைத்தோ்தல்: முதல்வா் மனைவி வெற்றி

மேகாலயத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) சாா்பில் காம்பேக்ரே தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் கான்ராட் கே.சங்மாவி மனைவி மெஹ்தாப் சண்டி அகிடோக் சங்மா சுமாா் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இமாலய வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்டை கைப்பற்றியது இந்தியா கூட்டணி! 56 இடங்களில் வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா்... மேலும் பார்க்க