சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
ஆக.23-இல் திருவெறும்பூரில் இபிஎஸ் பிரசாரம்: அதிமுக-வினா் ஆலோசனை
வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருவெறும்பூரில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாவட்ட செயலா் பா. குமாா் தலைமை வகித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மேற்கொள்ளும் தோ்தல் பிரசாரப் பயணத்தின் ஒருபகுதியாக வரும் 23-ஆம் தேதி திருவெறும்பூா் வருகை தரவுள்ளாா்.
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில், மாவட்டச் செயலா் பா. குமாா் பேசுகையில்,திருவெறும்பூா் பேருந்து நிறுத்தத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாா்.
குறிப்பாக தொகுதிக்குள்பட்ட 36 வாக்குச்சாவடிகளைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றாா். இக் கூட்டத்தில், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொணடனா்.