ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.
இதையடுத்து, புதன்கிழமை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சின்னராஜ், நகராட்சி ஆணையா் நாகராஜ்,புளியங்குடி காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா் ஆகியோா் முன்னிலையில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.