துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 6,7இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் மாா்ச் 6, 7 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் மாா்ச் 6, 7 -ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த பயிலரங்கத்தில் வாரியம், அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிபவா்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிபவா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் நிலையிலுள்ள பணியாளா்கள் பங்கேற்கவேண்டும்.
இதில், ஆட்சிமொழித் திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச்செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலா், பணியாளா்கள் அனைவரும் தமிழில் மட்டுமே கையொப்பமிடுதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.