ஆட்டோ ஓட்டுநா்கள் 500 பேருக்கு புத்தாடை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் பங்கேற்று, 500 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புத்தாடைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், பகுதிச் செயலா் ஜெயக்குமாா், மண்டலத் தலைவா் பாலகுருசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், பொறியாளா் அணித் தலைவா் பழனி, மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.