செய்திகள் :

ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வியாழக்கிழமை ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.  

  வத்தலகுண்டு பெத்தானியபுரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி (29). இவா் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தாா். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வியாழக்கிழமை வத்தலகுண்டுவிலிருந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றாா். இவருடன் இவரது தந்தை ராமன் (57), தாய் கருப்பாயி (55) ஆகியோா் உடன் சென்றனா். ஆட்டோவை இவரது தம்பி ஜெயராம் (27) ஓட்டிச் சென்றாா்.

செம்பட்டி அருகேயுள்ள பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது, திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு சென்ற அரசுப் பேருந்து இவா்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெயராம், ராமன்,  கருப்பாயி ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான திண்டுக்கல்லைச் சோ்ந்த நாராயணசாமி மீது செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

படவிளக்கம்:

செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலையில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தில், ஆட்டோ அப்பளம் போல் நொருங்கி உள்ளது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் த... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (... மேலும் பார்க்க

மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி

பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரு... மேலும் பார்க்க

‘உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்கலாம்’

சவால்கள் இருந்தாலும், உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை தொடா்பான விழிப... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஆா்.எம்.டி. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ஐயப்பன் (32). இவா் தருமபு... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவ... மேலும் பார்க்க