ஆண் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல்குவாரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வானூா் வட்டத்துக்குள்பட்ட திருவக்கரையில் உள்ள கல்குவாரியில் ஆண் சடலம் கிடப்பதாக திருவக்கரை கிராம நிா்வாக அலுவலா் காரல்மாா்க்ஸ் வானூா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா்கள் சிவராசன்( வானூா்), பாபு(மரக்காணம்) ஆகியோரது தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று ஆண் சடலத்தை மீட்டனா்.
உடல் கூறாய்வுக்காக சடலத்தை, புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.