தென்காசியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு: மாற்றுத்திறனாளிகள் மறுவா...
ஆண்களைவிட அதிக வேலை செய்யும் பெண்கள்!
வீட்டைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் ஒதுக்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வீட்டில் உள்ளோரை பராமரிப்பது போன்ற ஊதியம் இல்லாத பணிகளை அதிகம் செய்வது பெண்களே என்று தரவுகள் கூறுகின்றன.
வீட்டைப் பராமரிக்க பெண்கள் நாளொன்றுக்கு சராசரியாக 289 நிமிடங்களை ஒதுக்குவதாகவும், ஆனால் ஆண்கள் வெறும் (சராசரியாக) 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 299 நிமிடங்களை பெண்கள் ஒதுக்கியிருந்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து 2024-ல் 10 நிமிடங்கள் மட்டுமே பெண்களுக்கு குறைந்துள்ளது. அதாவது ஆண்களைக் காட்டிலும் 201 நிமிடங்கள் கூடுதலாக வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் பெண்கள்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான ஆய்வுக்குப் பிறகு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,
ஊதியமின்றி வீட்டு உறுப்பினர்களைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 62 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்குகிறார்கள். பெண்கள் 137 நிமிடங்களை ஒதுக்கும் நிலையில், ஆண்கள் 75 நிமிடங்களை மட்டுமே செலவிடுகின்றனர். இதில் 15 - 59 வயது வரையிலான பெண்கள் ஈடுபடுகின்றனர்.
வீட்டு வேலைகளைச் செய்வதற்கு பெண்கள் 289 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். இதே வேளையில் ஆண்கள் 97 நிமிடங்களை மட்டுமே ஒதுக்குகின்றனர்.
புதிதாக கற்றுக் கொள்வதற்கு பெண்கள் 413 நிமிடங்களையும் ஆண்கள் 415 நிமிடங்களையும் ஒதுக்குகின்றனர்.
தங்களின் தனிப்பட்ட பராமரிப்புக்காக பெண்கள் 706 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள். இதில் பெண்களை விட ஆண்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். ஆண்கள் 710 நிமிடங்களை ஒதுக்கிகிறார்கள்.
தொழில்முறை வேலைவாய்ப்பு தொடர்பான செயல்களில் ஆண்கள் 473 நிமிடங்களையும் பெண்கள் 341 நிமிடங்களையும் ஒதுக்குவதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!