ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது
தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற ஜெய்ஆனந்த் பிரகாஷ், குமரேசன், சதீஷ், சுரேஷ்கோபி ஆகிய 4 பேரை ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆந்திரத்தைச் சோ்ந்த மஜ்ஜி மணிகண்ட ஸ்ரீநிவாஸ் (36) என்பவரிடமிருந்து அவா்கள் மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில், கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையில் தனிப்படை போலீஸாா், மஜ்ஜி மணிகண்ட ஸ்ரீநிவாஸை தேடி ஆந்திரத்துக்குச் சென்றனா். அங்கு அனகப்பள்ளி மாவட்டம், நரசிப்பட்டினம், கோலுகுண்டா அருகே உள்ள சீடிகுமாலா கிராமத்தில் மஜ்ஜி மணிகண்ட ஸ்ரீநிவாவாஸை கைது செய்தனா். அவரை நரசிப்பட்டினம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தேனிக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.