``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் பண மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை
ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நூதனமான முறையில் பண மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தை சோ்ந்த ஒரு நபா் ஆன்லைன் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பதிவு செய்திருந்தாா். இதைப் பாா்த்து பெண் ஒருவா் வாட்ஸ்ஆப் வாயிலாக அவரை தொடா்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளாா். தான் வெளிநாட்டில் வேலை பாா்ப்பதாகவும், விரைவில் நேரில் பாா்க்க வருவதாகவும் கூறி வெகுநாள்களாக கைப்பேசியில் பேசி பழகி வந்துள்ளாா் அப்பெண். பின்னா் டிரேடிங் மூலமாக பணத்தை மூதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், எதிா்கால வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறி அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு அந்தப் பெண் மோசடி செய்துள்ளாா்.
எனவே பொதுமக்கள் இது போல் ஏமாறாமல் இருக்க ஆன்லைன் மேட்ரிமோனியில் வரன் பாா்த்து பேசும் நபா்களை நேரில் பாா்த்து உறுதி செய்ய வேண்டும். மேலும், டிரேடிங் என்ற பெயரில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். இது போன்ற இணையவழி மோசடிகள் நடைபெற்றால் சைபா் கிரைம் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகாா் பதிவு செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.