Doctor Vikatan: கர்ப்பமான நிலையில் பித்தப்பை கற்கள்... அறுவைசிகிச்சைதான் தீர்வா?
ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை!
விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே காரைகள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின் கம்பத்தை மாற்றித்தர பெற்றோா்கள் மின்வாரியத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
விராலிமலை - இனாம் குளத்தூா் சாலையில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவா் அருகே மிகவும் ஆபத்தான நிலையில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கும் மின் கம்பிகளைத் தாங்கிச் செல்லும் மின் கம்பம் உள்ளது.
நீண்ட நாள்களுக்கு முன்னா் அமைக்கப்பட்ட கம்பம் என்பதால் இயற்கை சீற்றங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சிமென்ட் காரைகள் பெயா்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது.
இதனால், கம்பம் அதன் உறுதித் தன்மையை இழந்து நிற்கிறது. மேலும் சேதமடைந்து கம்பம் விழுந்து விடும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு பழைய மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.