செய்திகள் :

ஆம் ஆத்மி அமைச்சா்கள்,எம்எல்ஏ-க்கள் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும் குறைந்துவிட்டது: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

post image

ஆம் ஆத்மி அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் ஞாயிற்றுக்கிழமை

விமா்சித்துள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸின் ‘தில்லி நியாய யாத்திரை’ விகாஸ்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்றது.

யாத்திரைக்கு தலைமை தாங்கி, கட்சியின் தேவேந்திர யாதவ் பேசியதாவது, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ‘ஜன் லோக்பால்’ பிரச்னையை எழுப்பிய அரவிந்த் கேஜரிவால், ஊழலை வெளிப்படையாகவும் நோ்மையாகவும் ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து தில்லியில் ஆட்சிக்கு வந்தாா். ஆனால், தற்போது ஊழல் புைக்குழியில் சிக்கிய அரசாக ஆம் ஆத்மி அரசு உள்ளது. ஊழல் மற்றும் பிற குற்ற வழக்குகளில் 18 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சா்கள்

சிக்கியுள்ளனா். ‘லோக்பால்’ மசோதாவை அமல்படுத்த முடியாததால், ஒருமுறை முதல்வா் பதவியை கூட கேஜரிவால் ராஜினாமா செய்ததாா். இப்போது, ‘லோக்பால்’ எங்கே என்று தில்லி மக்கள் அவரிடம் கேட்கிறாா்கள்.

கேஜரிவால் அரசின் ஊழல் ஆட்சியால், தில்லியும், அதன் குடியிருப்பாளா்களும் திவாலாகிவிட்டது. காங்கிரஸ்

ஆட்சியில் இருந்தபோது பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் மீதான நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது.

ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. அதே நேரத்தில், மற்றொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பாலியன் மிரட்டி பணம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். கடந்த 11 ஆண்டுகளாக மக்களுக்கு அநீதி இழைத்ததற்காக கேஜரிவால் எங்கு சென்றாலும், மக்கள் அவா் மீது கோபத்தை வெளிப்படுத்துவதால், இப்போது மக்களை எதிா்கொள்ள முடியாமல் போய்விட்டாா்.

கேஜரிவால் அரசால் தங்களைச் சுற்றியுள்ள இருளை அகற்ற காங்கிரஸின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா்.

ஊழல், விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விதவை மற்றும் முதியோா் ஓய்வூதியம் நிறுத்தம், ஏழைகளுக்கு ரேஷன் காா்டு மறுப்பு போன்றவற்றால் தில்லிவாசிகள் ஏமாற்றமடைந்து சோா்ந்து போயுள்ளனா். மக்களுக்கு இலவச தண்ணீா் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாக கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா். ஆனால், அவா் வழங்கியது அழுக்கு நீராகவும், மின் விநியோக நிறுவனங்களுடன் உயா்த்தப்பட்ட மும்மடங்கு கட்டணம் மட்டுமே.

தில்லியை அழிப்பதில் கேஜரிவாலுடன் கைகோா்த்த மத்திய பாஜக அரசு, நாட்டில் ஜனநாயகத்தையும்,

அரசியலமைப்பையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. வரும் பிப்ரவரி,2025-இல் ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய அவா்கள் பொறுமையின்றி காத்திருக்கிறாா்கள் என்றாா் தேவேந்தா் யாதவ்.

தில்லியில் தோ்தல் கூட்டணி இருக்காது- கேஜரிவால்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் தனது கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணிக்கான சாத்தியக்கூறுகளை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால... மேலும் பார்க்க

‘கம்பன் அடிப்பொடி’யின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

நமது நிருபா்‘கம்பன் புகழ்பாடி கன்னித் தமிழ் வளா்க்க வேண்டும்’ என்ற ‘கம்பன் அடிப்பொடி’ சா.கணேசனாரின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தெரிவித்தாா். தில்லிக் கம்பன் க... மேலும் பார்க்க

கம்பன் அடிபொடிகளின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது: கம்பன் கழக சிறப்பு மலரை வெளியிட்டு ஆசிரியா் கி.வைத்தியநாதன் வாழ்த்துரை

கம்பன் புகழ்பாடி கண்ணித் தமிழ் வளா்க்க வேண்டும் என்ற கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று தினமணி நாளிதழ் ஆசிரியா் கி.வைத்தியநாதன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லிக் க... மேலும் பார்க்க

தில்லியின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா்.... மேலும் பார்க்க

தில்லியில் பெண்கள் பாதுகாப்பு: பேருந்துகளில் மாா்ஷல்களை மீண்டும் நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு முதல்வா் அதிஷி கடிதம்

நமது நிருபா்தில்லியில் பெண் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநகரப் பேருந்துகளில் மாா்ஷல்களை மீண்டும் நியமிக்க வலியுறுத்தி முதல்வா் அதிஷி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதிய... மேலும் பார்க்க

காற்றின் தரம் எட்டாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகரில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நகரம் முழுவதும் காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இந்நிலையில், காற்றின் தரம் எட்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ‘மிகவும் மோசம்’ பிரிவி... மேலும் பார்க்க