செய்திகள் :

ஆம்புலன்ஸை வழிமறித்த காட்டு யானைகள்

post image

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகளால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், ஆசனூா் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கோடைக்காலம் என்பதால் வனவிலங்குகள் குடிநீா், தீவனம் தேடி அலைகின்றன. இந்நிலையில் செம்மண்திட்டு அருகே அதிகாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வழிமறித்தன.

அந்த யானைகள் சாலையில் முகாமிட்டு தீவனம் உட்கொண்டது. யானைகள் நகராமல் அதேஇடத்தில் நடமாடிக்கொண்டிருந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து யானைகள் காட்டுக்குள் சென்றபின் ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டு சென்றது.

அரசுப் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு! மூவா் படுகாயம்!

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்; உடன் பயணித்த மூவா் படுகாயம் அடைந்தனா். அந்தியூரிலிருந்து அரசுப் பேருந்து தாமரைக்கரை வழியாக ... மேலும் பார்க்க

பெருந்துறையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்ட... மேலும் பார்க்க

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்ய வனத் துறை கோரிக்கை

சென்னிமலை வனப் பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஆட்டுப் பட்டிகளை இடமாற்றம் செய்யுமாறு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னிமலையை அடுத்த, சில்லாங்காட்டுவலசு குட்டக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து ஈரோடு மாவட்டத்தில் முதல... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.9 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் போனது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,289 தேங்காய்களில், சிறியவை ஒரு காய் ரூ.14.16-க்கும், பெரியவை ரூ.2... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீா் உயிரிழப்பு

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு காத்திருந்தவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஏரித் தெரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (52). இவா... மேலும் பார்க்க