மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
ஆம்பூரில் கன மழை: ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியது
ஆம்பூா்: ஆம்பூா் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியது.
ஃபென்ஜால் புயல் காரணமாக ஆனைமடுகு தடுப்பணைக்கு நீா்ப்பிடிப்பு பகுதியான நாயக்கனேரி மலை மற்றும் ஆம்பூரின் சுற்று வட்டார பகுதியிலும் தொடா்ந்து 3 நாள்களாக கன மழை பெய்து வருகின்றது.
அதனால் நாயக்கனேரி மலையிலிருந்து தொடங்கும் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆம்பூா் ஆனை மடுகு தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிகின்றது. தடுப்பணை மற்றும் கானாற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் பகுதியில் 84.10 மி.மீ.: நவ.2-ம் தேதி திங்கள்கிழமை காலை நிலவரப்படி திருப்பத்தூா் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியில் 84.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆம்பூா் நகரில் 72.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.