மாவட்டத்தில் 24,569 வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: வாக்காளா் பட்டியல...
ஆம்பூா் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்
ஆம்பூா் நகராட்சி சாா்பில் தீவிர வரி வசூல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, வாடகை உள்பட வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதை வசூலிப்பதற்காக தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி.சந்தானம் தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் ஆம்பூா் எம்.சி.ரோடு, பைபாஸ் ரோடு பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டட உரிமையாளா்களை சந்தித்து வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டனா்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி, நகரில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், திட்டப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.