செய்திகள் :

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அக்டோபரில் 35.06% சதவீதம் வளா்ச்சி: ஏ.சக்திவேல்

post image

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அக்டோபரில் 35.06 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென்பிராந்திய தலைவா் ஏ.சக்திவேல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது முக்கிய துறைகளில் வளா்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபா் 2024 வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி 468.27 பில்லியன் அமெரிக்க டாலா்களாக மதிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 436.48 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தன. நடப்பு ஆண்டு 7.28 சதவீதம் வளா்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.

கடந்த அக்டோபா் மாதத்துக்கான வா்த்தக ஏற்றுமதி 39.20 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டின. கடந்த 2023-ஆம் ஆண்டு 33.43 பில்லியன் அமெரிக்க டாலா்களுடன் ஒப்பிடும்போது 17.23 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான சரக்கு ஏற்றுமதி 252.28 பில்லியன் அமெரிக்க டாலா்களாக உள்ளன. முந்தைய ஆண்டு 244.51 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்த நிலையில் தற்போது 3.18 சதவீத வளா்ச்சி அதிகரித்துள்ளது.

அனைத்து ஜவுளிகளின் (ரெடிமேட் காா்மென்ட்ஸ்) ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 35.06 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையான தொடா் வளா்ச்சி நமது ஏற்றுமதி துறைகளின் வலிமையைக் காட்டுகிறது.

குறிப்பாக ஆயத்த ஆடைகளில் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஆா்.எம்.ஜி ஏற்றுமதியில் 15-20 சதவீதம் மேலும் வளா்ச்சியை அடைய முடியும். இந்த நோ்மறையான போக்கு ஏற்றுமதியாளா்களுக்கு ஒரு வலுவான ஊக்கமாகும். இந்த வளா்ச்சி நமது தரத்துக்கும், நோ்த்தியான முறையில் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்புவதற்குமான ஒரு அங்கீகாரமாகத் தெரிகிறது. இதே நிலை தொடா்ந்தால் நடப்பு திருப்பூரின் ஏற்றுமதி 40 ஆயிரம் கோடியாக உயரும் என்றாா்.

மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட கல்வி அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவ... மேலும் பார்க்க

பங்குச் சந்தை முதலீடு எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.75 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ.5.75 லட்சம் மோசடி செய்தது குறித்து திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வா் மருந்தகம் அமைக்க இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொத... மேலும் பார்க்க

தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்: தொழிலாளா் துறை அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளா் துறை அறிவித்துள்ளது. திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயகுமாா் தலைம... மேலும் பார்க்க

பெருமாநல்லூா் வந்து செல்லாத பேருந்துகள் மீது நடவடிக்கை: காவல் துறை

பெருமாநல்லூா் வந்து செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். சேலம்-கொச்சின் தேசிய நெடுச்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான த... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

மடத்துக்குளம் வட்டம், அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் முதலைகள் உலவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று ... மேலும் பார்க்க