செய்திகள் :

``ஆயுர்வேத மருந்து உற்பத்தி 8 மடங்கு அதிகரிப்பு; 150 நாடுகளுக்கு ஏற்றுமதி'' - ஆயுஷ் நிகழ்வில் தகவல்!

post image

நாட்டிலேயே முதல் மாநிலமாக யோகாவுக்கென்று தனி கொள்கைகள் வகுத்து செயல்படுத்தும் மாநிலமாக உத்தரகாண்ட் உருவாகும் என அந்த மாநில முதலமைச்சர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் ஆயுர்வேத மருத்துவத்துடன் யோகாவையும் அங்கமாக்கும் வகையில் இந்த யோகா கொள்கைகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். இது ஆயுர்வேத மருத்துவ உலகில் புதிய புரட்சியை உருவாக்கும் எனக் கருதுகிறார்.

Dhami

10 -வது உலக ஆயுர்வேதா காங்கிரஸ் மற்றும் ஆரோக்யா எக்ஸ்போ - 2024 நிகழ்வில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் முதல்வர். இந்த எக்ஸ்போவில் 50 நாடுகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டனர். மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரகாண்டில், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தது.

மேலும் ஆரோக்கியம், கல்வி, ஆராய்ச்சி, மூலிகை மருந்துகள் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டந்தோறும் ஆயுஷ் கிராமம் ஒன்றை அமைக்கவும், ஆயுஷ் தொலைத்தொடர்பு நிலையங்கள், 50 யோகா ஆரோக்கிய மையங்கள் அமைக்கவும் திட்டமிருப்பதாக தெரிவித்துள்ள தாமி, மூலிகைகளின் இந்தி பெயருடன் ஆங்கிலப் பெயர்களையும் பயன்படுத்த வேண்டும். இது உலகளாவிய சந்தையில் அவற்றைக் கொண்டுசெல்லும் எனக் கூறியுள்ளார்

மத்திய இணையமைச்சர் ப்ரதாப்ராவ், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேத மருந்துப்பொருள்கள் உற்பத்தி, 8 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகைகளை இந்தியா 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் குறிப்பிட்டுள்ளார்.

10 வது உலக ஆயுர்வேதா காங்கிரஸ் மற்றும் ஆரோக்யா எக்ஸ்போ 2024

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது செய்தியை வாசித்தார் தலைமைச் செயலாளர் ராதா ரதூரி.

பிரதமர், "ஆயுர்வேதம் பல்வேறு உடல்நல சிக்கல்களுக்கு விரிவான தீர்வை வழங்குகிறது. நோய் தடுப்பு, ஊட்டச்சத்து, மனநலம் ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் வழங்குவதால் ஆயுர்வேதத்துக்கு உலகளாவிய சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் திறன் இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தொடர் சாரல் மழை... சூரம்பட்டி தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்! | Photo Album

அணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை நிரம்பியதுஅணை ... மேலும் பார்க்க

Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்" சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை

`பல விஷயங்கள் மாற வேண்டும்..'நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் சாலை விபத்துகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சாலை போக்குவத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச... மேலும் பார்க்க

Ayya Vaikundar: ``பிரதமர் மோடி தர்மயுகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்'' -ஆளுநர் ரவி கூறியது என்ன?

அகிலத்திரட்டு உதயதின விழாஅகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம்பதி அன்பு கொடி மக்கள் இணைந்து புனித அகிலத்திரட்டு உதயதின விழா கொண்டாடியது. அய்யனார்குளம் துலங்கும் து... மேலும் பார்க்க

Health: வேக வேகமாக சாப்பிட்டா ஆயுள் குறையுமா? - டாக்டர் விளக்கம்!

வேகமா சாப்பிட்டா ஆயுள் குறையும்னு பெரியவங்க சொல்வாங்க. ஏன் வேகமா சாப்பிடக்கூடாது; ஏன் நிதானமா சாப்பிடணும்னு செரிமானத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட டாக்டர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம். ’’சீக்கிரமா சாதிக... மேலும் பார்க்க

Delhi: ``தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ₹2100'' -அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மாநில அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை அறிவித்தது. அதோடு அதனை உடனடியாக செயல்படுத்தவும் செய்தது. விண்ணப்பித்த பெண்கள் அனைவருக்கும் ஆ... மேலும் பார்க்க

Diabetes: சிறுதானியங்களும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..? ஆய்வு சொல்வதென்ன?

’எனக்கு டயாபடீஸ் இருக்கு. அரிசி, சப்பாத்தியைத் தவிர்த்திட்டு சிறுதானியங்களை உணவுல சேர்த்துக்க ஆரம்பிச்சிட்டேன். இனிமே, எனக்கு ரத்தத்துல சர்க்கரை அளவு அதிகரிக்காது’ என்று நினைக்கிறீர்களா..? உங்களுக்குத... மேலும் பார்க்க