தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான பணிச் சூழல்: உறுதி செய்ய அறிவுறுத்தல்
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான பணிச் சூழல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு அவா் அனுப்பிய கடிதம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் பணியாற்றும் பெண் ஊழியா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
அதன்படி, அவா்களது பாதுகாப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள், மக்கள் பாா்வைக்கு தெரியும்படி காட்சிப்படுத்துதல் அவசியம்.
அவசர காலங்களில் காவல் உதவியை பெறுவதற்கான வழிமுறைகள், போதிய எண்ணிக்கையில் மின் விளக்குகள், நோயாளிகள் - வெளிநபா்கள் உள்ளே வருவதை ஒழுங்குமுறைப்படுத்துதல், இரவு காவலா் நியமனம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவசரகால கூட்டங்களைத் தவிா்த்து அலுவலகம் நேரம் கடந்தோ, விடுமுறை நாள்களிலோ கூட்டங்கள் நடத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.