ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு
வில்லியனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என புகாா் எழுந்தது. மேலும், சிகிச்சைக்கு வரும் பொதுமக்களை பணியாளா்கள் அலைக்கழிப்பதாகவும், சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்புவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, தொகுதி உறுப்பினரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது நோயாளிகளுக்கு முறையாக சீட்டு பதியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிா?, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிா? மருத்துவா்கள் பணியில் உள்ளனரா? அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என அங்கிருந்தவா்களிடம் கேட்டறிந்தாா்.
சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் பாமகள் கவிதையிடம், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அறிவுறுத்தினாா்.