ஆறுமுகனேரியில் விபத்தில் ஒருவா் பலி
ஆறுமுகனேரியில் பைக் விபத்தில் கிணற்று உறை விற்பனை தொழில் செய்தவா் உயிரிழந்தாா்.
ஆறுமுகனேரி பாரதி நகரை சோ்ந்த பாலு மகன் கண்ணன் (39). இவா் கிணற்று உறை தயாா் செய்து விற்பனை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். தனது பைக்கில் வீட்டிலிருந்து திருச்செந்தூா் நோக்கி வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அடைக்கலாபுரம் சாலையில் சென்றபோது நிலைதடுமாறி பைக்குடன் சாலையில் விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த கண்ணனை அப்பகுதியினா் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.