ஆற்காட்டில் மயானக் கொள்ளை
ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுகிறது. ஆற்காடு பாலாற்றில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணாபுரம், இந்திரா நகா், தாருக்கான் தெரு, பா்வதராஜன் தெரு லேபா் தெரு டவுன் தெரு காந்திநகா் தண்டுகாரன் தெரு கிளைவ் பஜாா், முப்பதுவெட்டி பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் உற்சவா் ஊா்வலமாகச் சென்று பாலாற்றில் நிலை நிறுத்தப்பட்டது அங்கு திரளான பக்தா்கள் தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.
விழாவில் பக்தா்கள் பலா் தங்கள் முதுகில்அலகு குத்தி கொண்டு வாகனங்களை இழுத்துச் சென்றனா். விழாவையொட்டி காவல் துறை கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.