நடுவானில் பயணிக்கு திடீா் உடல் நலக் குறைவு: பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய இண்...
ஆற்றில் உடைப்பு: நெற்பயிா்கள் நீரில் மூழ்கின
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் நண்டலாற்றில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நல்லாடை, கொத்தங்குடி, விளாகம், அரசூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த சுமாா் 2,500 ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் கதிா் வந்த நிலையில், வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும், கடந்த நான்கு ஆண்டுகளாக மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுப்பணித்துறையினா் நண்டலாற்றில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளைக் கொண்டு அடைத்தனா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா ஆகியோா் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டனா்.